பொள்ளாச்சி வழக்கு… தேடப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்.! வெளியாகப்போகும் தகவல்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் கைதாகி தீவிர விசாரணையில் உள்ள நிலையில்., இவர்களின் விசாரணை காலக்கெடுவை வரும் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி வரை நீட்டித்து நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்., இந்த வழக்கில் மற்றொரு இளைஞருக்கும் தொடர்பு உள்ளது என்றும்., அவரை கைது செய்து விசாரணை செய்யும் பட்சத்தில் மேலும் பலர் இந்த வழக்கு விசாரணையில் கைது செய்யப்படலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகியிருந்த பார் நாகராஜ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த செல்வராஜ் என்பவரின் மகனான மணிமாறன் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வரும் 28 ம் தேதியன்று கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளது. இவர்களை விசாரணை செய்யும் பட்சத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்., காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் இல்லாதார்களை தாக்கியது மற்றும் மிரட்டியது குறித்த புகாரில் பார் நாகராஜ்., செந்தில்., பாபு., வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த மணிவண்ணன் தலைமறைவாகவே., மீதமிருந்த அனைவரும் காவல் துறையினர் மூலமாக கைது செய்யப்பட்டு விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில்., இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மணிவண்ணன் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகவே வரும் 8 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து மணிவண்ணனை விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.