விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதுமைகளையும்., பல விதமான கோள்களையும்., நட்சத்திரங்களையும் கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நாசா ஆராய்ச்சி நிறுவனமானது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் உயிர் வாழ இயலுமா? என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இது போன்ற பல தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நாசா அமைப்பானது., செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும்., செவ்வாய் கோளில் இருக்கும் ரோவர் விண்கலத்தின் மூலமாக எடுத்து பல புகைப்படங்கள் அனுப்பப்பட்டது.
அவ்வாறு அனுப்பப்பட்ட புகைப்படங்களில் பல புகைப்படங்கள் ஏலியன் கோவில்கள் மற்றும் ஏலியன்கள் துப்பாக்கியை ஏந்திய நிலையில் இருப்பது போன்று புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்., சூரிய மண்டலத்தில் இருக்கும் நெப்டியூன் கிரகம் குறித்த ஆராய்ச்சிக்கு விண்கலத்தை தயார் செய்து அனுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டம் முன்மொழியப்பட்ட நிலையில்., அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.