பட்லர் முதுகில் குத்திய அஸ்வின்!!

2019 ஐபிஎல் தொடரின் 12வது சீசன் நடைபெற்று வருகிறது அதில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் ரகானே, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் ராகுல் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக மாயங்க் 22 ரன்களில் வெளியேற, அடுத்து சர்ப்ராஸ் கான் 46 ரன்கள் சேர்த்தார். அந்த அணியின் அதிரடி மட்டையாளர் கெயில் 47 பந்தில் 79 ரன்கள் எடுத்து ரன் குவித்தார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்டோக்ஸ் 2, குல்கர்னி, கெளதம் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் ரஹானே – பட்லர் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய ரஹானே 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து அதிரடியாக ஆடிய பட்லர் 69 ரன்கள் அடித்து இருந்த போது சர்ச்சைக்குரிய, முறையில் ஆட்டமிழந்தார்.

12.5 வது ஓவரை சாம்சன் எதிர்கொண்டார். அந்த பந்தை வீச வந்த அஷ்வின், பட்லர் அட்வான்ஸாக ரன் எடுக்க வெளியேறுவதை பார்த்து பந்து வீசுவதை நிறுத்தி ஸ்டெம்பிள் அடித்தார். இதையடுத்து அஷ்வின் நடுவரிடம் அவுட் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பட்லர் அஷ்வினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மைதானத்திற்குள் இருந்த இரண்டு நடுவர்களும் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, மூன்றாவது நடுவரிடம் கேட்டுள்ளனர். இதற்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தவுடன், பட்லர் ஆத்திரத்துடன் கத்தியபடியே வெளியேறினார்.

பொதுவாக எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் கோட்டைவிட்டு வெளியேறும் பொது முதலில் வார்னிங் கொடுப்பது வழக்கம். அந்த வார்னிங் வழங்கப்படவில்லை. டி -20 கிரிக்கெட்டில் இதுபோன்று ஒரு பேட்ஸ்மேன் ரன் அவுட்டாவது முதல் முறையாகும். நேற்று நடந்த நிகழ்வு விவாதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் செய்த சர்ச்சை ரன் அவுட் மூலம் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.