தினமும் தூங்குவதற்கு முன்னதாக இந்த பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.!

இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் பெரும்பாலானோர் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக தொப்பை. இதன் காரணமாக ஆசைப்படும் பொருட்களை சாப்பிட முடியவிலையே என்று வருத்தப்படுவதுண்டு.

இதன் காரணமாக உடல் எடையும் அதிகரித்து ஆசைப்பட்ட ஆடை அல்லது பிறரை போல ஆடையில் தோற்றமளிக்க இயலவில்லை என்று வருத்தப்படுவதுண்டு. தொப்பையை குறைப்பதற்கு கடினமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்குரிய மாற்று வழி குறித்து இனி காண்போம்.

தேன் பானம் செய்ய தேவையான பொருட்கள்:

பட்டைத்தூள் – 1/2 தே.கரண்டி.,
தண்ணீர் – 200 மி.லி.,
தேன் – ஒரு தே.கரண்டி.

தேன் பானம் செய்யும் முறை:

முதலில் எடுத்துக்கொண்ட நீரை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்க வேண்டும். நீர் சூடான பின்னர் அடுப்பை அனைத்து விட்டு எடுத்து கொண்ட பட்டை தூளை சேர்த்து சுமார் அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அரைமணி நேரம் பட்டை தூள் மற்றும் நீர் சேர்த்து ஊறியவுடன் அதனுடன் தேனை சேர்த்து குடித்து வர வேண்டும். தினமும் இரவு உறங்குவதற்கு முன்னதாக ஒரு குவளை குடித்தால் போதுமானது.

தேன் பானத்தின் பயன்கள்:

இதன் மூலமாக நமது உடலின் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி., உடலில் தேவையற்று இருக்கும் பாக்டீரியா., பூஞ்சை., ஒட்டுன்னிகள் மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

அது மட்டுமல்லாது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை தேடி கண்டறிந்து கரைத்து., கொழுப்புகளை வெளியேற்றி நமது உடல் எடையை பராமரிக்கிறது.

கண்டிப்பாக இந்த தேன் பானத்தை குடித்த பின்னர் பிற பானங்கள் அல்லது பழச்சாறுகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட கூடாது.