தெருவில் நிர்வாணமாக அலையும் பெண்களுக்கு நடுவில் என் மகனை வளர்க்க விரும்பவில்லை: ஐ.எஸ் பெண் அதிரடி!

அவுஸ்திரேலியா, தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் ஒரு நாடு, அங்கு என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை என ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அதிரடியாக அறிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்து, நாடு திரும்ப உதவுமாறு அயர்லாந்து பெண் ஒருவர் கெஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாணவியாக இருந்த Janai Safar (24) என்னும் இளம்பெண் இப்படி ஒரு அதிரடி அறிக்கை விடுத்துள்ளார்.

தனது உறவினரான பெண் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி சிரியாவுக்குச் சென்று அங்கு தீவிரவாதி ஒருவரை மணந்து கொண்ட Janai, வீடு திரும்ப வேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர்.

பத்திரிகையாளர் ஒருவர் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் இருக்கும் Janaiயை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெருக்களில் நிர்வாணமாக பெண்கள் அலையும் ஒரு நாட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்தது நான்தான்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சிரியாவுக்கு வந்ததிலோ, ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வாழ்வதிலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறும் Janai, தான் ஆயுதப் பயிற்சி பெறவோ, சண்டையிடவோ இல்லை என்றும், தனது ஜிகாதி கணவனுக்கு ஒரு மனைவியாக மட்டுமே இருந்ததாகவும், என்றாலும், அவுஸ்திரேலியாவுக்கு திரும்பினால் தான் சிறையில் அடைக்கப்படுவேன் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், 2017ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தீவிரவாதிகள் சிலருடன் Janaiக்கும் அவரது உறவினரான இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.