சாய் பல்லவியை திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல தமிழ் இயக்குனர்?

விக்ரமின் தெய்வதிருமகள், விஜயின் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல். விஜய் இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை சாய்பல்லவி தற்போது இவர் பல படங்களை நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை சாய்ப்பல்லவியை 2வதாக திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது.

இவர்கள் இருவரும் திருணம் செய்துகொள்ளப்போவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. ஆனால் இது வதந்தியாக இருக்கவே அதிக அளவில் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.மேலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.