தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் கருநீல நிறக் கோடுகளைக் கண்ட பெற்றோர் என்ன நடந்தது என்று அறிவதற்காக கெமராவை பரிசோதித்தபோது, அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
மிச்சிகனில் இருக்கும் அந்த வீட்டில் வசிக்கும் Heather Brough (25) மற்றும்
அவரது கணவர் Josh Higgins (30) ஆகியோர் அவ்வப்போது அமானுஷ்ய சத்தங்களைக் கேட்டிருக்கிறார்கள் என்றாலும், இந்த சம்பவம் அவர்களை வீட்டை மாற்றிக் கொண்டு போய்விடலாமா என்று எண்ண வைத்திருக்கிறது.
தங்கள் குழந்தை படுத்திருக்கும் தொட்டிலின் அருகே ஒரு ஆண் உருவம் நடப்பதையும், திடுக்கிட்ட குழந்தை எழுந்து தேடுவதையும் அந்த வீடியோவில் கண்ட பெற்றோர், மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் ஆவி அந்த வீட்டில் நடமாடுவதாக கருதுகிறார்கள்.
அதன் பின்னர்தான் குழந்தையின் கன்னத்தில் காணப்பட்ட கோடுகள், யாரோ அதன் முகத்தைக் கீறியதால் ஏற்பட்டவை என்பதும் அவர்களுக்கு புரிய வர, அச்சத்தில் உறைந்தனர் அந்த பெற்றோர்.
ஏற்கனவே இரண்டு பேர் அந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், இனியும் இந்த வீட்டில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்று அவர்கள் கருதுகின்றனர். அந்த மனிதனின் ஆவி தங்களை வீட்டை விட்டு துரத்த எண்ணுகிறது என்று கருதும் அவர்கள் வேறு வீடு பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இதற்கிடையில் Higginsஇன் தாயார், அந்த வீட்டின் முந்தைய உரிமையாளராகிய ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அந்த வீட்டில் நீண்ட நாள் வாழ்ந்ததாகவும், ஒரு நாள் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், மன நலம் பாதிக்கப்பட்ட அவரது அண்ணன், இறக்கும் வரை அந்த வீட்டில் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளது வேறு தம்பதியினருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.