ரத்தம் கொதிக்க வைக்கும் கொடூரம்.! துடிதுடித்து கதறிய பெற்றோர்கள்!

கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் 6 வயது பெண் குழந்தை, திப்பனூர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியை, அவரது தாயார் பக்கத்தில் இருந்த மளிகைகடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பியுள்ளார்.

ஆனால் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர்கள் குழந்தையை பல இடங்களில் தேடியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் இரவு முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சிறுமி இன்று அதிகாலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள முட்டுச்சந்தில், முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் உடல்கள் முழுவதும் காயங்களுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர்கள் கதறி துடித்தனர்

அதனை தொடர்ந்து போலீசார்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தல் மற்றும் கொலை வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.