கலைஞர் என்னை அப்படி வளர்க்கவில்லை! ஸ்டாலின் துயரம்!

திருவள்ளூர் அருகே காக்களூரில் நடந்த பிரசார கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில் “மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியையும், மத்தியில் மோடி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

சூரியனும், கையும் இணைந்தால் எப்பொழுதும் வெற்றி தான். திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ளது. தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு அதிமனுக்க ஏதாவது வளர்ச்சி பணிகளை செய்துள்ளதா?

இந்திய ராணுவ வீரர்களை கூட காப்பாற்ற முடியவில்லை. மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். யாருடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. என்பதை மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் தரப்படும் என பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் அதை முன்னதாகவே கொடுத்திருக்கலாமே? மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நான் அதிமுக கூட்டணியை தரக்குறைவாக பேசுவதாக கூறி வருகின்றனர். என்னை கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. வி நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்வோம்., செய்வதைச் சொல்வோம்” என அவர் கூறியுள்ளார்.