சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! பிரபல வீரருக்கு ஏற்பட்ட திடீர் காயம்!

செர்பியா- போர்ச்சுகல் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய செர்பியா அணி, பெனால்டி மூலம் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடியும்போது, போர்ச்சுகல் அணியின் டேனிலோ அருமையாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

ஆட்டத்தின் 31வது நிமிடத்தின் போது, போர்ச்சுகல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு நேர்ந்த காயம் குறித்து பேசிய அவர்பேசுகையில் இது பொதுவாக நடப்பதுதான். என் உடலை பற்றி எனக்கு தெரியும். இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் திரும்பி விடுவேன் என கூறினார்.

இந்தநிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் ரொனால்டோவின் ஜுவென்டஸ் அணி, காலிறுதி சுற்றில் அஜாக்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட ரொனால்டோ திரும்புவார், என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆனாலும், காயத்தின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, அஜாக்ஸ் அணியுடன் மோதும் ஆட்டத்தில் ரொனால்டோவுக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.