இன்றைய ராசிபலன் (27/03/2019)

  • மேஷம்

    மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1 மணி முதல் சந்தி ராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்  சிகளை மேற் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுப் பொருள் சேரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு  வேலை முடியும். வீடு, வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன் படுத்திக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதிப்
    பெருகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • துலாம்

    துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர் மறை எண்ணங்கள் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண் பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: மதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவு களில் மூழ்குவீர்கள். இரண் டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. போராடி வெல்லும் நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனைவிக் குள் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும். முக்கிய கோப் புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.  வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்க
    டங்கள் வரும். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை
    யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். இனிமையான நாள்.

  • மீனம்

    மீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களால் மதிப்புக் கூடும். நீண்டநாட்களாக தள்ளிப் போனகாரியங்கள் இன்று முடியும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.