கோர விபத்து…! பரிதாபமாகப் பலியான முதியவர்…!

சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். மருதனார் மடம் சந்தையில் நேற்றையதினம் மரக்கறிகளை வாங்கிக்கொண்டு குறித்த முதியவர் உடுவில் மானிப்பாய் வீதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாரவூர்தி ஒன்றினை முதியவர் முந்தி செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியது.

குறித்த விபத்தில் முதியவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும்,  படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.