நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உணவுப் பழக்கங்கள் என்பவற்றினால் மனிதர்களில் பல வகையான உடல் கோளாறுகள் உண்டாகிவருகின்றன.
இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.இதேபோன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் 5 வகையான பழக்கவழங்கங்கள் ஒருவரை மெல்ல மெல்ல கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதில் சக்கரை நிறைந்த பானங்களை அருந்துதலும், பல படிமுறைகளில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணுதலும் உள்ளடங்குகின்றது.சுமார் 118,000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருதல், புகைத்தல், நிறை கூடுதலாக அல்லது குறைவாக இருத்தல் மற்றும் அதிகமாக அல்கஹோல் அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களும் அடங்குகின்றன.