திருமணத்தின் போது மணமகன் இல்லாததால் அவரின் முகம் பொறிக்கப்பட்ட தலையணையை மணப்பெண் திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் துபாயை சேர்ந்த இளைஞருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டது. இந்நிலையில் திருமண நேரத்தில் மணமகன் சில காரணங்களால் வரமுடியவில்லை.
ஆனால் மணப்பெண் கலங்கவில்லை, இதையடுத்து அதிரடியாக அவர் ஒரு முடிவை எடுத்தார்.அதாவது தனது வருங்கால கணவரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட தலையணையை அவர் மணமேடைக்கு கொண்டு வந்த நிலையில் அதனை திருமணம் செய்து கொண்டார்.
அவர் ஏன் இப்படி செய்தார் என்ற விபரம் தெரியவில்லை. இதனிடையில், தலையணையை மணப்பெண் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.