தண்டவாளத்தில் துண்டு துண்டாக சிதறிக்கிடந்த அழகிய சிறுமி!

அதிவேகமாக வந்த ரயில் முன் செல்பி எடுப்பதற்காக சென்ற ரஷ்ய இளம்பெண், உடல்சிதறி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Orsk நகரத்தை சேர்ந்த கரினா பேமுக்குபெட்டோவா (15) என்கிற சிறுமி, தன்னுடைய தோழன் ஒருவனுடன் வெளியில் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.

ரயில் தண்டவாளத்திற்கு சென்ற இருவரும், அதிவேகமாக வந்த சரக்கு ரயில்முன் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு பயந்த அந்த இளைஞர், கரினாவை எச்சரித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த கரினா, பயப்படாமல் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என கூறிக்கொண்டே அந்த செல்பி எடுத்துள்ளார்.

இதற்கிடையில் ரயில் வேகமாக வருவதை பார்த்த இளைஞர் தண்டவாளத்திலிருந்து வெளியில் குதித்துவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த சிறுமி சிக்கிக்கொண்டு உடல்சிதறி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், பொதுமக்கள் அனைவரும் செல்பிக்கு அடிமையாக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேசமயம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தண்டவாளத்திற்கு செல்லக்கூடாது எனவும், அது ஆபத்தான பகுதி எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரயிலை இயக்கிய ஓட்டுநர் கூறுகையில், தண்டவாளத்தில் மனிதர் நடமாட்டம் இருப்பதை பார்த்ததும் நான் ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டேன்.

அருகில் சென்றதும் உடனே பிரேக்கை அழுத்திவிட்டேன். ஆனால் ரயில் நிற்க தாமதமானதால் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது என கூறியுள்ளார்.