ஐஸ்வர்யா தத்தா., இயக்குனருடன் படப்பிடிப்பு தளத்தில் செய்த கேவலமான வேலை.!

தமிழ் திரையுலகிற்கு பாயும்புலி., தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்., ஆறாது சினம் போன்ற பல்வேறு திரைப்படங்களின் மூலமாக நடித்து பின்னர்., பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக படவாய்ப்புகள் குறைவாக உள்ளது என்ற நிலை மாறி., பட வாய்ப்புகள் வர துவங்கியது. அந்த வகையில்., கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா., அலேகா மற்றும் கன்னித்தீவு போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

அலேகா திரைப்படத்தை புதுமுக இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கவே., கதாநாயகனாக நடிகர் ஆரி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்பார்வையானது போர்வைக்குள் இருவரின் கால்கள் மற்றும் தெரியும் படி வெளியானது. இந்த முதற்பார்வையை கண்ட சிலர் கடைசியாக அவரை வைத்து இந்த படம் எடுத்து வருகிறீர்களா என்று விமர்சனங்களை முன் வைத்தனர்.

இதனை கவனித்த படக்குழுவானது இந்த படம் காமத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை., காதல் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்தது. இந்நிலையில்., ஐஸ்வர்யா படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் குறித்த நேரத்திற்கு வருவதில்லை என்ற பிரச்சனை எழுந்துள்ளது.

தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வரும் ஐஸ்வர்யாவிடம் பல முறை விரைவாக வாருங்கள் என்று இயக்குனர் எச்சரித்துள்ளார். மேலும்., சில முக்கிய காட்சிகள் இவர் இல்லாமல் படப்பிடிப்பு துவக்க முடியாமல் வந்த பிற நடிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை பல முறை இயக்குனர் எடுத்து கூறியும் ஐஸ்வர்யா கேட்காததை அடுத்து., ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவிற்கும் – இயக்குனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலானது வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.