260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி!

அமெரிக்காவில் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் குட்மேன் (45) என்பவர் கடந்த ஆண்டு மே மாதம், நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இடத்தில் எலக்ட்ரிக் படகு ஒன்றினை வேலை செய்துகொண்டிருந்த போது செல்போனை பயன்படுத்தியுள்ளார்.

இதை பார்த்த அவருடைய முதலாளி ஆத்திரத்தில் செல்போனை பறித்துள்ளார். அதனை சோதனை செய்யும் போது, தாமஸ் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பிறந்து 3 வாரங்கள் மட்டுமே ஆகியிருந்த இரண்டு கைக்குழந்தைகளை, வளர்ந்து 18 மாத குழந்தையாகும் வரை மிரட்டி வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு குட்மேனின் வழக்கறிஞர், மேத்யூ டாஸன் கோரிக்கை விடுத்தார்.

அதேசமயம் அரசு தரப்பு வழக்கறிஞர், குழந்தைகளை மிரட்டி இத்தைய இழிவான செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இறுதியில் குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்தார்.

இதனை கேட்டதும் அந்த குற்றவாளி தான் அமர்ந்திருந்த மேஜையிலேயே மயக்கம் போட்டு சரிந்துவிழுந்தான். சிறிது நேரம் கழித்து எழுந்ததும், நீதிபதி தீர்ப்பினை மீண்டும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்.