ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுளது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பெங்களூரு அணி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, சிறப்பாக ஆடி தோல்வியுற்றது. இந்தநிலையில், இன்று நடக்கும் ஐந்தாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஆடிவருகின்றனர்.
இன்று நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க மட்டையாளர்களான ஷிகர் தவான் மற்றும் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடினர். பிரிதிவி ஷா 16 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துவக்க மட்டையாளர் ஷிகர் தவானுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ரிஷாப் பண்ட் 13 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வெளியேறினார். இறுதியில் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 7 விக்கிட்டுகளை பறிகொடுத்து 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. இன்று நடக்கும் மைதானம் சென்னை அணிக்கு எதுவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியின் துவக்க மட்டையாளரான வாட்சன் சிறப்பாக ஆடி 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் நாயகன் தோனி சிறப்பாக, நிதானமாக ஆடி சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஜோடியாக கேதர் ஜாதவ் நன்கு கம்பெனி கொடுத்து சிறப்பாக ஆடினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.