இந்திய விமானப்படையின் போர் விமானியான தமிழக வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி இந்திய விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர், இரண்டு வாரத்துக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வீடு திரும்பினார். சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை செய்துவந்தது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.