திருச்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஞானேந்திரன்என்பவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்டிட தொழிலில் செய்துவந்துள்ளார். இந்தநிலையில் இவருக்கும் காரைக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பனை போலவே பழகியுள்ளார்.
ஞானேந்திரன் நல்லவன் என நம்பி இவர்களது நட்பு செல்போனில் பேசும் அளவுக்கு ஆனது. ஞானேந்திரன் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியவும் புகைப்படங்களும் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஞானேந்திரன் திருமணமானவர் என தெரியவந்துள்ளது. அது தெரிந்தவுடன் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தினார்.
ஆனால், நான் சொல்வது படி நடக்கவில்லை என்றால் உனது ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது அவற்றை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுபற்றி உண்மை அறிந்த மனைவியின் உறவினர்கள் ஞானேந்திரனை பிடித்து காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரிடம் அந்த மாணவி அளித்த புகாரில், ஞானேந்திரன் தனக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதை மறைத்து என்னுடன் நெருங்கி பழகினார். மேலும், என்னை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரிவித்தார்.
அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் ஞானேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.