ராதாரவியை பழிவாங்கிய ஸ்டாலின்..!

மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் “கொலையுதிர் காலம்” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பழம்பெரும் நடிகர் ராதா ரவி, நயன்தாரா குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பலர் தரப்பில் இருந்து கண்டம் தெரிவித்தனர். மேலும் நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. ராதா ரவியை திமுக கட்சியிலிருந்து விலக்கினார்கள். தனது குடுப்பதில் இருப்பவர்களே ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவரும் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் செய்தியாருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியவை,

2006-ல் இருந்து ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது டிடிவி.தினகரனின் திட்டம். அது ஒருபோதும் நடக்காது. தென் காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்றும், ராதாரவி திமுகவில் சேர்ந்ததே தவறு. நயன்தாரா விவகாரத்தை வைத்து ஸ்டாலின் பழி தீர்த்து விட்டார் என்று கூறினார்.