சிகிச்சைக்கு உதவி கேட்ட விஜயலட்சுமியை விளாசிய பிரபல நடிகர்!

கன்னட சினிமாவில் நாகமண்டலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் அவர் கன்னட மொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் கன்னட சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்து இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு அதிகமான ரத்த அழுத்தம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் திருமணமாகாத நிலையில் தனது தங்கையுடன் வாழ்ந்து வந்த அவருக்கு சிகிச்சை செய்வதற்கு பணம் இல்லாத நிலையில்,அவரது தங்கை திரையுலகை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல நடிகர்கள் அவருக்கு தாமே முன்வந்து பண உதவி செய்தனர்.

இந்நிலையில் விஜயலட்சுமி தான் உடல்நிலை சரி இல்லாமல் உதவி கேட்டும் சில கன்னட நடிகர்கள் எனக்கு உதவி செய்யவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் இதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது.

உடலில் குறையுள்ள மனிதர்களே கடினமாக உழைத்து வாழும் போது, கை,கால்கள் நன்றாக இருக்கும் அவர் ஏன் தன்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் எனில் உள்ளிருந்து அந்தஉணர்வு வரவேண்டும் என சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.