கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை அருகேயுள்ள திப்பனூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தை அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில்., பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததை அடுத்து சிறுமியை தேடி அழைத்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில்., அங்குள்ள கஸ்தூரிநாயக்கன் புத்தூர் பகுதியில் உள்ள இடத்தில் சிறுமியின் பிரேதம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று., பின்னர் பெற்றோரை வரவழைத்து அவர்களது குழந்தை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில்., மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து., விஜயகுமார் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பொள்ளாச்சியில் அரங்கேறிய கொடூரத்தின் பதட்டத்தில் இருந்து வெளியே வராத நிலையில்., தற்போது நடைபெற்றுள்ள சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது போன்ற பல தொடர் சம்பவங்கள் உலகம் முழுவதும் அரங்கேறிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.