தனக்கு எதிராக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வட. மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்.
இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றை நான் எதிர்கொண்டு வருகின்றேன். அண்மையில் ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் இரண்டு வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். அந்நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வாறான வழக்கு விசாரணைகளையும் நான் எதிர்கொண்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.