இந்த உலகில் உள்ள பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக பல துயர சம்பவங்களும்., கொடூர சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி., காட்சிப்பதிவுகள் செய்த பிரச்சனையானது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் அரங்கேறிய சம்பவத்தை அறிவோம்.
அதனை போன்றே நாகபட்டினத்திலும் இது போன்ற சம்பவம் அரங்கேறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்., இன்று வெளியான அதிர்ச்சி சம்பவமானது கன்னியாகுமரியை சார்ந்த நிதின் என்ற இளைஞர் தனது தோழியிடம் இரு சக்கரவாகனத்தில் சென்று வரலாம் என்று அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ காட்சிப்பதிவு செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில்., உத்திரபிரேதேசம் மாநிலத்தில் இருக்கும் மருத்துவமனையில் பெண்ணொருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அங்கு பணியில் இருந்த நான்கு ஆண்கள் உட்பட ஒரு பெண் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., மருத்துவமனையில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை செயலிழக்க செய்து விட்டு., பின்னர் பெண்ணிற்கு மயக்க ஊசியை செலுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட சமயத்தில் பெண்ணின் உறவினர்கள் யாரும் இல்லாதது இவர்களுக்கு வசதியாக அமையவே., இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது அந்த பெண் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..