ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது. முதல் போட்டியில், சென்னை-பெங்களூரு மோதியது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் நான்கு போட்டிகள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில், இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் இரவு 8 மணி தொடங்குகிறது.
மேலும், சென்னையில் வரும் 31-ம் தேதி நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதியுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்தது. பல மணி நேரம் வரிசையில் நின்று ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.