நேர்கொண்ட பார்வை : தல அஜித்தின் நியூ லுக்!

விஸ்வாசம் படத்தில் சிறுத்தை சிவாவிற்கு பிறகு தல அஜித் அடுத்ததாக இணைய இருக்கும் அடுத்த இயக்குநர் வினோத். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், டாப்ஸி போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘பிங்க்’. இப்படத்தை அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அஜித் – வினோத் கூட்டணிக்காக கைப்பற்றியுள்ளார் போனிகபூர்.

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “நேர்கொண்ட பார்வை” என பெயரிடப்பட்டுள்ளது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தல அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சில நாட்கள் முன் வெளியிட்டது.

நேர்கொண்ட பார்வை படம் அஜித் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அப்படி அஜித் ரசிகருடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அஜித் க்ளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் இருக்கிறார். இதற்கு முன்னர் படத்தின் முதல் பார்வையில் தாடியுடன் இருப்பார் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.