தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வாக்காளர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை, வேட்புமனு தாக்கல் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து அடுத்த மாதம் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நடிகரான விஜய் சேதுபதி மக்களிடம் கோரிக்கையாக “இந்த தேர்தலில் அனைவரும் ஓட்டு போட வேண்டும்.
மக்கள் அரசியலை சாக்கடை என்று ஒதுக்கி விடக் கூடாது. சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை திட்டி பதிவு போட்டு விட்டு போய் விடாதீர்கள். நம் வீட்டில் சாக்கடை அடைத்தால் நாம் என்ன செய்கிறோம்? நாம் தானே இறங்கி சுத்தம் செய்கிறோம்.
அதுபோலதான் தேர்தலும், தேர்தலை புறக்கணிக்காதீர்கள். ஒவ்வொருவரும் சேவை செய்பவர் யார்? பதவிக்கு அழைப்பவர் யார்? என புரிந்து வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.