தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசையின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரின் சொத்துமதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி ரூ. 21 கோடி அளவில் அசையும் சொத்துகள் உள்ளது, ரூ. 8.92 கோடி அசையா சொத்துகளும் உள்ளதாக தனது வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 முதல் 2018 நிதியாண்டில் கிடைத்த வருமானத்தின் மதிப்பு ரூ. 1.40 கோடி. அதில் ரூ. 1.92 கோடி வங்கிக் கடன் இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில்தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை, ரூ. 1.50 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளது, ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக உள்ளதாக தனது வேட்புமனுவில் தமிழிசை தெரிவித்துள்ளார். 2018-19 நிதியாண்டில் கிடைத்த வருமானத்தின் மதிப்பு ரூ. 93 ஆயிரம். அதில் தமிழிசை சௌந்திரராஜன் வங்கியில் தன் பெயரில் ரூ. 1.87 லட்சம் கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.