தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மகளும், மாநிலங்களவை எம்பி-யுமான கனிமொழி அவர்கள் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார். இருவரும் தூத்துக்குடி தொகுதியில் தீவிர பிரச்சாரம் ஈடுபட்டுவரும் நிலையில், கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்ததாக கருது கணிப்புகள் கூறிவந்தன.
ஆனால், தற்போதைய நிலவரப்படி தமிழிசைக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் அதிகம் பேச தொடங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் தொகுதியில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழிசை அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதும், சரத்குமார் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து இருப்பதும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழிசை அவர்கள், கடந்த ஞாயிறு அன்று வெற்றி வாகை சூடிய முருகன் ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் கோவிலில், சத்ரு சம்ஹார பூஜை நடத்தினார். இது திமுகவில் உள்ள நிர்வாகிகளுக்கு கண்ணை உறுத்தவே, விபூதியை கூட நெற்றில் இடாதா கனிமொழி அவர்களின் தாயாரும், கருணாநிதியின் மூன்றாவது மனைவியுமான ராஜாத்தி, திருச்செந்தூர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தனது மகள் வெற்றி பெற சிறப்பு பூஜையும் நடத்தியுள்ளார்.
இதனை இணைய வாசிகள், இந்துக்களின் புனிதமான தாலியை மூடப்பழக்கம் என்று சொல்லி, ஊர் தாலியை அறுக்க சொல்லும் திமுகவினர், கோவில் படியேறி வெற்றி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது திராவிடத்தின் பகுத்தறிவுக்கு வந்த சோதனை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ தோல்வி உறுதியாகிவிட்டது. அந்த பயத்தில் தான் முருகனை தேடி வந்தாரா கலைஞரின் மூன்றாவது மனைவி? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகனை சுமார் ஒன்றரை மணி தரிசனம், பூஜை செய்தபின் வெளியே வந்த ராசாத்தி அம்மாள் தெரிவிக்கையில், ”வரும் மக்களவை தேர்தலில் என் மகளை (கனிமொழி) முருகப் பெருமான் வெற்றி பெறச் செய்தாலே எனக்கு போதும்” என்று மூட பழக்கத்தை முக்காடு போட நினைத்த திராவிடர்களின் தலையில் ஒரு துண்டை போட்டு தெரிவித்தார்.
தன் தந்தை (கருணாநிதி) நோயுற்ற தருவாயிலும் நெற்றியில் இட்ட விபூதியை அழித்த கனிமொழி அவர்களின் வெற்றி இன்று முருகன் கையில் இருக்கிறது என்பது. முருகனுக்கு வந்த சோதனையா? இல்லை திராவிடத்தின் தலைவர் பெரியாருக்கு வந்த சோதனையா?.
சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க ஊருக்கு தான் உபதேசம்னு.!!