கடந்த ஞாயிறு அதிகாலை 6 மணியளவில் லண்டன் பினர் என்னும் இடத்தில் கொலைசெய்யப்பட்ட கடை உரிமையாளர் ரவி தொடர்பாக மேலதிக தகவல்கள் கசிந்துள்ளது. இவரது கடையில் ஏற்கனவே சிகரட் கொள்ளை முன்னர் இடம்பெற்றுள்ளது என்பதனை தற்போது பொலிசார் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்பது ஒரு புறம் இருக்க. இவரது கடையை தனக்கு தருமாறு அருகில் உள்ள கோஸ்டா கடை உரிமையாளர் வற்புறுத்தி வந்ததாக நண்பர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள்.
அதுபோக ஞாயிறு காலை 5 மணிக்கு எழுந்து, ஒரு கள்வன் கத்தியோடு வந்து, 6 மணி வரை காத்திருந்து. அருகில் எந்த கடையும் அந்த நேரத்தில் திறந்திருக்க மாட்டார்கள் என்று தெரிந்து வைத்திருந்து. இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால். அவர் வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே இருந்த கல்லாப் பெட்டியை(டில்) ஏன் தூக்கிக் கொண்டு போகவேண்டும் ? என்ற கேள்வி எழுகிறது அல்லவா. அது போக குறித்த கொலையாளி ரவி மீது தாக்குதல் நடத்திய விடையம் எதேட்சையான விடையம் அல்ல என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
கொள்ளை சம்பவம் என்று காட்டவே சும்மா கல்லாப் பெட்டியை மட்டும் கொண்டு போய் உள்ளார்கள். ஆனால் உள்ளே முக்கியமாக பெறுமதி மிக்க பொருட்கள் எதிலும் கொள்ளையர் கை வைக்கவே இல்லை. இதனால் லண்டன் பொலிசார் இக்கொலையை வேறு கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. நீண்ட நாட்களாக இந்தக் கடையை தனக்கு தந்துவிடுமாறு அருகில் உள்ள சில கடைக்காரர்கள், ரவிக்கு கடும் அழுத்ததை கொடுத்து வந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். இது இவ்வாறு இருக்க , அருகில் உள்ள பாடசாலைச் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் இன்று அவர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தியுள்ளார்கள்.
தனது கடைக்கு வரும் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளை அவர் நல்ல முறையில் நடத்துவது வழக்கம். காசு இல்லையென்றால் கூட நாளை கொண்டு வந்து தாருங்கள் என்று கூறி இனிப்பு பண்டங்களை ரவி அவர்கள் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கி இருந்தார் என்று, மாணவி ஒருவர் தெரிவித்திருந்தது ஆங்கில ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.