சீனாவின் சியாமென் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதில் ஒரு குழந்தையை மட்டும் அந்த பெண்ணின் கணவருக்கு பிடிக்கவில்லை. மேலும் அதன் கண்,காது,மூக்கு மற்றும் உருவமே வேறு மாதிரி உள்ளது என்னை போல் இல்லை,அது என் குழந்தை இல்லை எனவும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் போது, குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது வழக்கம். இவ்வாறு குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்த போது குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து வெளிவந்த ரிப்போர்ட்டில் ஒரு குழந்தை இவருக்கு பிறந்தது எனவும், மற்றொரு குழந்தை இவரது குழந்தை இல்லை எனவும் முடிவுகள் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து இதுகுறித்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எழும் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண் தனது கணவருக்கு தெரியாமல் ஒரே நாள் இரவு மட்டும் வேறொரு அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட கணவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்குழந்தையை ஏற்றுவல்ல முடியாது எனவும் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு எடுத்து கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும் அதனைதொடர்ந்து வேறு, வேறு நபர்களின் குழந்தைகள் எப்படி ஒன்றாக இரட்டை குழந்தைகளாக பிறக்க முடியும் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தது. இதனை தொடர்ந்து இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,அடுத்த அடுத்த நாட்களில் வேறு வேறு நபர்களுடன் உறவு கொள்ளும்போது இது போன்ற கருமுட்டைகள் உருவாக வாய்ப்பு உள்ளது மேலும் 400 ஜோடிகளில் ஒரு ஜோடிக்கு இதனை போல நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.