தலைவலி., மூளைக்கு ஆற்றல்., இரத்த விருத்தி., உடற்பருமன்…. இந்த கீரையை சாப்பிடுங்கள்.!

இன்றுள்ள குழந்தைகள் பெரும்பாலும் கீரை வகையிலான உணவுகளை சரிவர சாப்பிடுவதில்லை. மேலும்., குழந்தைகள் தான் இவ்வாறு இருக்கின்றனனர் என்று இருந்தால்., சில இளம் வயதினரும் இதே போன்று கீரை வகையிலான உணவுகளை சாப்பிடாமல் இருக்கின்றனர். அந்த வகையில் பசலைக்கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

இந்த கீரையில் அதிகளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி., பொட்டாசியம்., சுண்ணாம்பு சத்துக்கள்., உப்பு மற்றும் கார சத்துக்களின் காரணமாக நமது உடலின் சக்தியானது அதிகரிக்கிறது. இதன் மூலமாக நமது உடலில் இரும்பு சத்துக்கள் அதிகரிக்கப்பட்டு., இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.

பசலைக்கீரையில் இருக்கும் மருந்துவ குணத்தின் மூலமாக நமது உடலில் ஏற்படும் பித்த பிரச்சனைகள்., நீர்த்தாரை பிரச்சனைகள்., வெட்டை நோய்கள்., மேக நோய்கள் மற்றும் பிற தோல் நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது., தூக்கத்தில் விந்தணுக்கள் வெளியேறும் பிரச்சனையை குணப்படுத்துகிறது.

சிறிதளவு பசலைக்கீரையை எடுத்து நெருப்பில் வாட்டி தலைக்கு பற்று போன்று இட்டு வர தலைவலியானது சரியாகி., மூளைக்கு அதிகளவு ஆற்றலை வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறந்தவுடன் பசலை கீரை உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தியை அதிகரிக்கும். அதிகளவு உடற்பருமனால் அவதியுற்று வந்தால்., பசலைக்கீரையை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பசலைக்கீரையை பொரியல் மற்றும் குழம்பு போன்று வைத்து சாப்பிட்டலும்., பிற உணவு வகைகளில் சேர்த்து சாப்பிட்டாலும்., சூப் போன்று வைத்து சாப்பிட்டாலும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.