குடிபோதையில் இளம்பெண்ணின் மோசமான செயல்…. வைரலாகும் வீடியோ

பிரித்தானியாவில் இருந்து கிளம்பிய விமானத்தில் இளம்பெண் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் விமானமானது ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிரித்தானியாவின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயினின் பூயர்டென்தூரா நகரத்துக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, உள்ளிருந்த இளம்பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

அவரை கட்டுப்படுத்த விமான ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இளம்பெண்ணுடன் வந்த நண்பரும் அவரை அமைதி காக்குமாறு கூறியும் பலனில்லாமல் போனது.

இதனால் பொறுமையிழந்த விமான ஊழியர்கள் விமானியிடம் இது குறித்து கூறினர்.

இதையடுத்து விமானம் ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த பொலிசார் விமானத்தில் ஏறி, மது போதையில் தகராறில் ஈடுபட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்றனர்.

அப்போது பயணிகள் அனைவரும், கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதன்பின்னர் விமானமானது கிளம்பி சென்றது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.