தென்னிலங்கையை ஆட்டிப் படைத்த பெண்ணின் அதிரடிக் கைது!

‘அருனி பபா’மற்றும் ‘தெல் சூட்டி’ ஆகியோர் மட்டக்குளி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சிறைசாலைக்குள்ளிருந்து போதைப் பொருட்கள் கடத்தலை வழிநடத்தும் குடு ரொஷானின் மனைவியே ‘அருனி பபா ‘ ஆவார்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலின் படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரிடமிருந்தும் போதை மாத்திரைகள் மற்றும் 1.7 மில்லியன் ரூபா பணத்தையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குடு ரொஷானின் றாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் உள்ள இரு வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், கடவத்தை வீட்டில் வைத்து ´தெல் சூட்டி´ என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கடவத்தை வீட்டில் வைத்து 02 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் 100 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஷேட அதிரடிப் படையினரால், மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் அப் பகுதியில் பரபரப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.இன்னும் பல கைதுகள் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.