இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் மற்றும் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தமிழகத்தில் தேர்தல் களைகட்டியுள்ளது. அதிமுக சார்பில் திருப்பூரில் மக்களவைத் தொகுதியில் எம்எஸ்எம் ஆனந்தன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியும் ஆன பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், “திருப்பூரில் ஆனைமலை ஆறு-நள்ளாறு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பாஜக பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
பிரதமர் வேட்பாலராக ராகுல் மோடியை எதிர்த்து நிற்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரலாற்றை நீங்கள் மீண்டும் ஏற்படுத்திவீர்களா? இரட்டை இலைக்கு வாக்கு அறிவீர்களா?
திருப்பூர் தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்ற ஆனந்தனை வெற்றி பெற நாம் அனைவரும் சூளுரைப்போம். இந்த கூட்டணி இனி என்றைக்கும் தொடரும் கூட்டணி” என தெரிவித்துள்ளார்.