தமிழிசை செய்த தவறு.! பெரு மூச்சுவிட்ட கனிமொழி.!

தூத்துக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு 4 மணி நேர இழுபறிக்கு பின் ஏற்கப்பட்டது.

வரும் மாதம் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

அதேபோன்று திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்னியூஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த இரண்டு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து, நேற்று காலை 11 மணி முதல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில், திருச்சி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் பாமக வேட்பாளர் சாம் பால் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம் பின்னர் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜனும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பின் தமிழிசை அவர்களின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம். கனிமொழியின் வேட்புமனு பி-2 படிவத்தை நிரப்பாததால் நிறுத்தி வைத்தது. 4 மணி நேர பரிசீலனைக்கு பின் செய்யப்பட்டு, அவரது மனுவும் ஏற்கப்பட்டது.