தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்திய பல படங்களை இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, காளி, கை கொடுக்கும் கை என பல படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் இவரது திரைப்படங்கள் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பெருமை வாய்ந்ததாக இருந்தது. அதனை தொடர்ந்து சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்த மகேந்திரன், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தேறி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.
மேலும் ரஜினியின் பேட்ட , விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தில் வழக்கறிஞராகவும், பூமராங் படத்திலும் நடித்துள்ளார் .
இவ்வாறு தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது மகனும் இயக்குனருமான ஜான் மகேந்திரன் தனது அப்பாவுக்காக பிராத்தனை செய்யுங்கள் என ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்வதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Pray for APPA pic.twitter.com/YV8UpYrHXX
— Dir.JohnMahendran (@johnroshan) 27 March 2019