ஏப்ரல்1 முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்!

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்‌ தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், சுங்கவரிக் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது‌.

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.மேலும் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

இத்தகைய அறிவிப்பால் சுங்கவரிக் கட்டணம் தற்போது உள்ளதை விட 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயரும்.

இவ்வாறு உயர்த்தப்படும் சுங்க வரி கட்டணத்தால் மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவில் பாதிக்கிறது மேலும் இதனால் பேருந்து கட்டணங்கள் கை காய் கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.