தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரதாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பிரசாரம் செய்துள்ளார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் உரிய அனுமதியின்றி பிரசாரம் செய்யததாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சங்கராபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயசூரியன் ஆகிய 2 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.