ரஸ்ஸல் ஆடிய ருத்ரதாண்டவம்! பலியான பஞ்சாப்!

12வது ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க மட்டையாளர்கள் கிறிஸ் லயன்- சுனில் நரேன் இருவரும் ஆரம்பத்தில் சொதப்பிய படி ஆட்டமிழந்தனர். நரேன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, ராணா இருவரும் அதிரடியாக ஆடி எணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ராணா 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். இவர் 7 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 50 பந்துகளுக்கு 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் காலத்தில் நின்றார். அவருடன் இணைந்த ரஸ்ஸல் 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஆனால் அது நோபால் என அறிவிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக தப்பினார் ரஸ்ஸல். பின்னர் 17 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்து 4 பவுண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி இன்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க மட்டையாளர்கள் ராகுல், கெயில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய மாயங் அகர்வால் 34 பந்துகளில் 58 ஓட்டங்களை எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

அதனையடுத்து களமிறங்கிய ஷரபாரஸ் கான் 13 பந்துகளில் 13 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். அதனையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் சிறப்பாக ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவருடன் இணைந்த மன்தீப் சிங் நிதானமாக ஆடி கை கோர்த்தார். ஆனாலும் கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சினால் பஞ்சாப் அணி 20 முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.