துடிதுடிக்க மாணவனின் கையில் சூடான மெழுகை ஊற்றிய ஆசிரியர்!

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஒருவன் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அப்பள்ளியின் ஆசிரியை மற்றும் பள்ளி தாளாளரின் மகளான ரம்யா அவருக்கு தண்டனை கொடுப்பதற்காக மெழுகுவர்த்தியை பற்றவைத்து, அதில் உருகிய மெழுகை மாணவனின் கையில் ஊற்றி சூடுவைத்துள்ளார்.

இந்நிலையில் வீடிற்கு சென்ற மாணவனின் கையை கண்டு ஆவேசமான அவனது பெற்றோர்கள் இதுகுறித்து ஆசிரியை மீது புகார் அளித்தனர். மேலும்

இதையடுத்து போலீசார் ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் கையில் சுடப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.இச்சம்பவம் அப்பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.