12வது ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க மட்டையாளர்கள் கிறிஸ் லயன்- சுனில் நரேன் இருவரும் ஆரம்பத்தில் சொதப்பிய படி ஆட்டமிழந்தனர். நரேன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, ராணா இருவரும் அதிரடியாக ஆடி எணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ராணா 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். இவர் 7 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தினார்.
ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 50 பந்துகளுக்கு 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் காலத்தில் நின்றார். அவருடன் இணைந்த ரசல் பந்துகளை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பெவிலியனுக்கே பறக்கவிட்டார். பின்னர் 19.4 வது ஓவரில் 17 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரசல் 4 பவுண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.