கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயிலானது வாட்டி வதைத்து வருகிறது. காலநிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் காரணமாக அளவுக்கு அதிகமான வெயிலானது அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையமானது தொடர்ந்து தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு இயற்கையான பழச்சாறு வகைகளை கண்டிப்பாக உட்கொள்வது நல்லது. உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தரும் பழங்களை சாப்பிட வேண்டும். அதிகளவில் நீரை பருக வேண்டும். அந்த வகையில் உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும் மசாலா மோர் செய்யும் முறைகள் குறித்து இனி காண்போம்.
மசாலா மோர் செய்யத்தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் – 1 கிண்ணம்.,
தண்ணீர் – 1 கிண்ணம்.,
கொத்தமல்லி – 2 தே.கரண்டி.,
மோர் மிளகாய் – 1 எண்ணம் (Nos).,
உப்பு – தே.அளவு..
மசாலா மோர் தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 தே.கரண்டி.,
கடுகு – 1/4 தே.கரண்டி…
மசாலா மோர் அரைப்பதற்கு…
பச்சை மிளகாய் – 1/2 எண்ணம் (Nos).,
கறிவேப்பிலை – 3 எண்ணம் (Nos).,
இஞ்சி – சிறிதளவு..
மசாலா மோர் செய்முறை:
எடுத்துக்கொண்ட தயிரை பாத்திரத்தில் போட்டு., அதில் நீரை ஊற்றி உப்பு சேர்த்து தனியாக வைத்து கொள்ளவும்.
அரவை இயந்திரத்தில் எடுத்துக்கொண்ட இஞ்சி., பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை தயிரில் சேர்த்து நன்றாக மோர் போன்று அடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் வாணெலியை அடுப்பில் வைத்து., எண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்., அதில் கடுகு சேர்த்து தாளித்து மோர் மிளகாயை வறுத்து எடுத்த பின்னர் அதில் மோரை சேர்த்து கொத்தமல்லியை தூவி உப்பு சேர்த்து இறக்க வேண்டும்.