இவர்களை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்.! உயர் நீதிமன்றம் அதிரடி.!

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு லஞ்ச வழக்கின் தீர்ப்பின் பொது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஓட்டுக்கு லஞ்சம் பெறுவது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துவிடும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) இருந்த சரவணன், லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து வி.ஏ.ஓ. சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தீர்ப்பு வசிக்கும் போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவிக்கையில், ”நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழல்வாதிகள் தேச விரோதிகள் என்று அறிவிக்க வேண்டும்.

தேர்தலில் ஓட்டுப்போட பணம் கொடுப்பது ஜனநாயகத்தை ஆட்டம் காண செய்துவிடும். லஞ்சம் என்பது சமுதாயத்தின் சாதாரண விஷயமாக விட்டது வருத்தப்பட வேண்டிய விஷியமாக உள்ளது” என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.