பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா முக்திபாத். இவரது மனைவி நயினா குமாரி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான கிருஷ்ணா அடிக்கடி குடித்துவிட்டுவந்து தனது மனைவியை நயினாவையும்,மகள்களையும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது தொடர்ந்த நிலையில் பொறுத்துக்கொள்ள முடியாத நயினா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து இரண்டு மகள்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் ஆனால் தனது மூன்றாவது மகளான சிறுமியை தன்னுடன் அழைத்து செல்ல முடியவில்லை.
இந்நிலையில் தன்னுடன் வசித்து வந்த சிறுமியை கிருஷ்ணா குடித்துவிட்டு அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார் மேலும் அவரை மனரீதியாகவும் மிகவும் துன்புறுத்தியுள்ளார். மேலும் அவ்வாறு அவர் கொடூரமாக அடிக்கும் வீடியோவை தனது மனைவி நயினாவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி நயினா, உடனே இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி போலீசார் கவனத்துக்கு சென்ற நிலையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் ஐந்து வயது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய கிருஷ்ணாவை கைது செய்தனர்.