இந்தியா முழுவதும் தேர்தல் காய்ச்சலானது பலமாக அடித்து வருகிறது. தமிழகத்திலேயே வேட்புமனுக்கள் பெறுவது எல்லாம் முடிந்து வேட்புமனு பரிசீலனையும் முடிந்து விட்டது. வேட்புமனுக்கள் திரும்ப பெரும் காலம் முடிந்தவுடன் வேட்பாளர் இறுதி பட்டியலும் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எப்படியும் 4 முனை போட்டி இருக்கும் என்ற எண்ணம் தான் பலருக்கும் இருந்தது. ஏனெனில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தனித்தனியான அணியாகவும், பாமக, தினகரன் தனித்தனி அணியாகவும் போட்டியிடுவார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் ஆக எட்டு வருடங்களுக்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சி ஆனது மீண்டும் கூட்டணி என்ற நிலைப்பாட்டிற்கு வந்து ஆளுங்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியை அமைத்து கொண்டது.
தமிழக அரசியல் களத்தில் இதுதான் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் ஆகும். அதுவும் இந்த ட்விஸ்ட் ஆனது சிலருக்கு அதிகமாகவே அதிர்ச்சியை கொடுத்தது. அதுவும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தான் பேரதிர்ச்சியாக அமைந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் திட்டமானது இந்த தேர்தலில் அதிமுக, திமுக மற்றும் பாமக தனித்தனி அணிகளாக நிற்கும்பொழுது வாக்குகள் சிதறும் அதனால் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் நமக்கு கிடைத்தால் நாம் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற குதுகலத்தில் தான் இருந்தது.
இந்நிலையில் கூட்டணி சேர்ந்து விட்டார்கள் இனி என்ன செய்வது என்று நினைத்த மு க ஸ்டாலின் நேரடியாக அதிமுகவிடம் மோதுவதைத் தவிர்த்து பாமகவுடன் மோதும் வகையில் தங்களது வெற்றிக்கு எளிதாக இருக்கும் என்ற கணக்கில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் மற்றும் அரக்கோணம் தொகுதிகளை பாமக போட்டியிடுகிறது என்று தெரிந்தவுடன் எங்களுக்கு நிச்சயமாக வேண்டும் என காங்கிரசில் இருந்து கேட்டு வாங்கிக்கொண்டது.
பாமக போட்டியிடும் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தருமபுரி, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் என 7 தொகுதிகளிலும் திமுக பாமக இடையே நேரடி போட்டி உருவானது. . விழுப்புரம் தொகுதியில்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் போட்டியிட்டாலும் அவர் திமுகவில் உறுப்பினராக மாறி உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியால் ஒன்னும் செய்ய இயலாது என கருதிய திமுக, பாமகவை எப்படியாவது எளிதாகவே வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்து கணக்குப் போட்டது.
ஆனால் தற்போது மிகப்பெரிய ஏமாற்றத்தை திமுக பெற்றுள்ளது. தமிழக கூட்டணி வரலாற்றில் இல்லாத ஒன்றை, மருத்துவர் ராமதாஸின் வியூகம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறையும் சாத்தியமாக்கிவிட்டது. அதுவும் தற்போதைய தமிழக அரசியலின் மூத்த தலைவரான டாக்டர் ராமதாஸின் வியூகங்கள் அனைவருக்குமே ஆச்சரியம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. இவ்வளவு ஒற்றுமையாக அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக மற்றும் சிறு சிறு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதுவே திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
இதையெல்லாம் பார்த்த திமுக பாமகவை தோற்கடிக்க குறுக்கு வழி இருக்குமா என்று யோசித்து பார்த்ததில் பாமகவிற்கு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் பாண்டிச்சேரியில் அவர்களுக்கு அங்கீகாரம் இருக்கிறது. அதை வைத்து அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தை வழங்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அனுமதி அளித்து விட்ட நிலையில், திமுக வழக்கறிஞர் அணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அனுப்பி பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை வழங்க கூடாது என்று ஒரு மனுவை அளித்து எதிர்ப்பு தெரிவிக்க வைத்துள்ளார். இதனை பார்த்த பாமக தொண்டர்கள் “சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா ஸ்டாலின்” என்று கூலாக பேசி விட்டு செல்கின்றனர்
பாமகவை சந்திக்க தடுமாறுகிறதா? திமுக, பாமகவை கூட நேரடியாக சந்தித்து போட்டியிட திமுகவில் இவ்வளவு பயமா? எதிர் கட்சியின் சின்னத்தை முடக்கி வெற்றிபெற நினைக்கிறது திமுக, அந்தளவிற்கு பலவீனமாக உள்ளதா? என்ற கேள்விகள் கட்சியை சாராத மக்களின் இடையே கூட எழ ஆரம்பித்துள்ளது. 7 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என நினைத்தால் யாருமே எதிர்பாராத அளவில் திண்டுக்கல், மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் தேர்வு ஆனது யாருமே எதிர்பாராத அளவில் அசத்தலான வேட்பாளர்களை நிறுத்தியதுடன், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாமக ஆதரவு அதிகரித்து வருவது அவர்களின் பிரச்சார வியூகமே சொல்கிறது. அதனை கண்டு திமுக அச்சம் கொள்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலே திமுகவின் இதுபோன்ற செயல்பாடுகளும் உள்ளது.
எளிதாக வெல்லலாம் என நினைத்து ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு ஸ்டாலின் தவிப்பதையே இது காட்டுகிறது என திமுகவினர் புலம்பி வருகின்றனர். தேவையில்லாமல் ஆறு தொகுதிகளை பாமகவிற்கு எதிராக தேர்ந்தெடுத்தது எங்கள் தலையில் நாங்களே மண்ணள்ளி போட்டுக்கொண்டது போல தான் என புலம்பி செல்கிறார்கள் திமுகவினர். போதாக்குறைக்கு இந்த விடுதலை சிறுத்தைகளை கூடவே வைத்துக்கொண்டு வாக்கு கேட்டால் யார் போடுவார்கள் என புலம்பிகொண்டும் இருக்கின்றனர்.