நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் பகுதியில் உள்ள சுனாமி நகரை சார்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் மீனவராக பணி செய்து வருகிறார். இவரது முதல் மனைவியின் பெயர் மல்லிகா. மல்லிகா கடந்த 2004 ம் வருடத்தில் இந்தியாவின் கடற்கரை நகரை சோகத்தில் ஆழ்த்திய ஆழிப்பேரலை (சுனாமி) காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்கள் இருவருக்கும் 5 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில்., குழந்தைகளை வளர்ப்பதற்கு கடந்த 2005 ம் வருடத்தின் போது அங்குள்ள திருமுல்லைவாசல் பகுதியை சார்ந்த செல்வி (வயது 40) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில்., செல்வம் சர்க்கரை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்., கடந்த 26 ம் தேதியன்று இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறை அடுத்து., செல்விக்கு செய்யப்படும் மருத்துவ செலவுகளை இனி வழங்க மாட்டேன் என்று கூறி., அவரின் காதில் அங்கிருந்த விஷத்தை ஊற்றிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். உயிருக்கு போராடி துடித்த அவரை மீட்ட உறவினர்கள்., உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் செய்து வந்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நேரத்தில்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது தெரியவரவே., இந்த செய்தியை கேட்ட உறவினர்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர்.