சாதிக் பாட்ஷா கொலை? முக ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், மக்களவை தேர்தலோடு 19 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு, தமிழக மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் தடுத்து கொண்டிருப்பதாகவும், தமிழக அரசை குறை சொல்லி கொண்டு இருப்பதாய் முக ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், சாதிக் பாட்ஷா கொலைக்கு யார் காரணம் என்று சொல்ல திமுக தலைவர் முக ஸ்டாலினால் கூற முடியுமா என்ற கேள்வியையும் பிரமேலதா விஜயகாந்த் முன்வைத்துள்ளார்.