இரத்தத்தை சுத்திகரித்து உடல் நலனை மேம்படுத்த??

நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய தேவைகளில் ஒன்று இரத்தம் ஆகும். இரத்தத்தின் அளவானது நமது உடலில் குறையும் பட்சத்தில்., நமக்கு ஓயாத சோர்வு மற்றும் அதனால் ஏற்படும் பிற பிரச்சனைகள் என்று பல பிரச்சனைகளுக்கும்., பல நோய்களுக்கு அவதியுற நேரிடும்.

அந்த வகையில்., உடலில் இருக்கும் இரத்தம் சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்., இரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களின் மூலமாக நமது உடலின் ஆரோக்கியமானது பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. இரத்தத்தில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றுவதற்கு உதவி செய்யும் இரத்த சுத்தபானத்தை தயார் செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.

இரத்த சுத்தபானம் செய்யத்தேவையான பொருட்கள்:

கேரட் – 5 எண்ணம் (Nos).,
எலுமிச்சை பழம் – 2 எண்ணம் (Nos).,
வெள்ளரிக்காய் – 1 எண்ணம் (Nos).,
ஆரஞ்சு – 1 எண்ணம்.,
இஞ்சி – 1 துண்டு.,
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி….

இரத்த சுத்தபானம் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வெள்ளரிக்காய்., எலுமிச்சை பழம்., ஆரஞ்சு பழம்., கேரட் மற்றும் இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் ஒன்றன் பின்னர் ஒன்றாக அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து நீர் சேர்த்து., வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் மஞ்சளை சேர்த்து நன்றாக அரைத்து சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். இந்த இரத்த சுத்த பானத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றல் பருகி வந்தால்., இரத்தம் சுத்திகரிப்பட்டு நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது.